செய்திகள்

காவிரி விவகாரம் - மத்திய அரசை கண்டித்து நாளை மருந்தகங்கள் ஸ்டிரைக்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் நாளை மருந்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. #CauveryManagementBoard

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. மாணவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வழிகளில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் மருத்து கடைகளும் இணைந்துள்ளன.

நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்தகங்கள் இயங்காது எனவும், அத்தியாவசிய மருந்துகளை இன்றே பொதுமக்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளன. #CauveryManagementBoard

SCROLL FOR NEXT