செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு 12-ம் தேதிக்குள் ரூ.1600 கோடி நிலுவைத் தொகை: சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உத்தரவு

கரும்பு விவசாயிகளுக்கு 12-ம் தேதிக்குள் ரூ.1600 கோடி நிலுவைத் தொகை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் சம்பத் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் அறிவித்த ஆதார விலைப்படி சர்க்கலை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றன. நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று அளித்த பேட்டியில், ஜனவரி 12-ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கு  ரூ.1600 கோடி நிலுவைத்தொகையை வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சர்க்கரை விலை குறைந்ததால்தான் ஆலைகள் நிலுவைத் தொகை தர தாமதம் ஆனதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்துறை கூட்டம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் வரும் 9-ம் தேதி நடைபெற  உள்ளதாகவும் அமைச்சர் சம்பத் குறிப்பிட்டார்.