செய்திகள்

மிலாது நபி: தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மிலாது நபி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக உயர்ந்த மனித பண்புகளான ஒழுக்கம், அன்பு, இரக்கம் மற்றும் ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் உயர்ந்தவராக திகழ்ந்தார். இந்த நல்ல நாளில் அன்பை மேம்படுத்தி இச்சமுதாயத்தில் சமாதானம் மற்றும் ஒற்றுமை மேம்பட அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.