செய்திகள்

காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ராஜ்பவனில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #CauveryIssue

சென்னை:

காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு பின்னர் மாலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 3-ம் தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி கூடுதல் கால அவகாசம் கேட்கும் பட்சத்தில் தமிழகத்தில் போராட்டம் அதிகமாகும் என தெரிகிறது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ராஜ்பவனில் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். #CauveryIssue

SCROLL FOR NEXT