செய்திகள்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு கோவை வருகிறார்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருச்சூர் எக்ஸ்பிரஸ் மூலம் இன்று இரவு கோவை வருகிறார்.

கோவை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருச்சூர் எக்ஸ்பிரஸ் மூலம் இன்று இரவு 8 மணிக்கு கோவை வருகிறார்

அவருக்கு ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) அவர் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை காலை 10 மணிக்கு கோவை குமரகுரு கல்லூரியில் தியான மையம், நூலகம் திறப்பு விழா நடைபெறுகிறது.

இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு நூலகம் மற்றும் தியான மையத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் 11 மணியளவில் கோவை பீளமேட்டில் கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர் செல்லும் வழியில் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். #Tamilnews

SCROLL FOR NEXT