திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கவர்னர் பன்வாரிலால் புரோகித். 
செய்திகள்

திருப்பதியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

மாலை மலர்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மதியம் சென்னை சென்ட்ரலில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்கு வந்தார்.

முக்கிய பிரமுகர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருப்பதி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரில் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

அங்கு, சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் திருச்சானூர் சென்று, பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார்.

திருச்சானூரில் இருந்து காரில் புறப்பட்டு திருமலைக்கு வந்தார். இரவில் தேவஸ்தான விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

இன்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவையில் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.