செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியத்தை உயர்த்தும் வகையில் கடந்த மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கடந்த மாதம் கூடிய தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இம்மசோதாவை எதிர்த்த நிலையில், வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இம்மசோதாவிற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.