செய்திகள்

தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு- சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீதம்

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் மதியம் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.