புதுடெல்லி:
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முறையான சட்ட விதிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. சட்ட விதிகள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றித்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.