கோப்புப்படம் 
செய்திகள்

தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் இன்று நடைபெற்ற பாலம் திறப்பு விழாவில் தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.வுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் காத்திருந்தார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக அவர் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் வடக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் வருகைக்காக சுமார் 7 நிமிடம் காத்திருந்தார். தி.மு.க. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோர் வந்ததும் அவர் பாலத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.