எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 30 ஏரிகள் தூர் வாரப்படுகிறது

ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை தொடங்கி வைக்கிறார்.

ஊத்துக்கோட்டை:

குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 ஏரிகளை தூர்வார தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இதில் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் 10 ஏரிகள் அடங்கும்.

ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (7-ந் தேதி) மாலை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் அவர் ஜனபன்சத்திரம் அருகே உள்ள மஞ்சாங்காரணையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கான மேடை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT