செய்திகள்

கவர்னருக்கு பிறந்தநாள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய வேண்டும் என்று முதல்-அமைச்சர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களது பிறந்த நாளில் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT