சென்னை:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், ஆனைமலைக் குன்றுகள் கிராமம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் மழையின் காரணமாக, பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த, வால்பாறையைச் சேர்ந்த ஸ்ரீதரனின் மகன் சிவராமன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த சிவராமன் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.