தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
• பழங்குடியினர் நலனுக்காக ரூ.333.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
• அடர்ந்த வனத்தை உருவாக்க 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரங்கள் நடப்படும்
• பள்ளிக்கரணை சதுப்பு நில மீட்பு திட்டத்திற்காக ரூ.165.68 கோடி ஒதுக்கீடு
• புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி ஒதுக்கீடு
• திருநெல்வேலி, கிருஷ்ணகிரியில் உணவு பதப்படுத்துதல் பூங்கா
• குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு
• 54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகளாக ரூ.80 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்
• 2018-19-ம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்
• அணைகள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.166.08 கோடி நிதி ஒதுக்கீடு
• பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி
• ரூ.1 கோடி மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையம்- ஓபிஎஸ்
• சர்க்கரை ஆலை லாபத்தில் விவசாயிக்கு பங்கு கிடைக்க திட்டம்
• ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு அளிக்க முடிவு
• அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.724 கோடி ஒதுக்கீடு
• விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
• துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்
• உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது