தமிழக சட்டசபை 
செய்திகள்

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டப்பேரவை செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.