தமிழக சட்டசபையில் இன்று 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-
• விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற அலைபேசி செயலி அறிமுகம்
• கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்
• ரெயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு
• நெடுஞ்சாலை துறைக்கு ரூ.11,073.66 கோடி ஒதுக்கீடு
• பத்திரப்பதிவு மூலம் ரூ.10,963 கோடி கிடைக்கும்
• வாகன வரி மூலம் ரூ.6,212 கோடி கிடைக்கும்
• வணிக வரி மூலம் ரூ.86,853 கோடி கிடைக்கும்
• பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் மேம்பாடு திட்டம்- 769 சாலைகள் மேம்பாடு, 25 பாலங்கள் கட்ட ரூ.1,244.35கோடி
• 2017-18ம் ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ.1,59,363 கோடி
• மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.25 ஆயிரமாக உயர்வு
• மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.545.21 கோடி ஒதுக்கீடு
• கோவையில் டைசல் உயிர்ப்பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி
• வேளாண் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்காக, நுண்ணுயிர் பாசனத்திற்காக ரூ.215 கோடி ஒதுக்கீடு.