தமிழக சட்டசபையில் இன்று 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்க மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்
* வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.71 கோடி ஒதுக்கீடு
* வேளாண் துறைக்கு ரூ.8916.25 கோடி ஒதுக்கீடு
* 2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்களை தமிழக அரசு இலவசமாக வழங்கும்.
* நீர்வழிப்பாதை போன்ற ஆட்சேபத்திற்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீடு வழங்க திட்டம்
* அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி
* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
* நபார்டு வங்கி உதவியுடன் ரூ.200 கோடியில் 70 ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்
* அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.519.81 கோடி நிதி ஒதுக்கீடு.