செய்திகள்

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான கடன் உச்சவரம்பு ரூ.5 கோடியாக உயர்வு

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான கடன் உச்சவரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2018 #OPS

மாலை மலர்

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

• முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான கடன் உச்சவரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்

• இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ.109.42 கோடி ஒதுக்கீடு

• ஸ்மார்ட் சிட்டிக்கு மாநில அரசின் பங்காக ரூ.1400 கோடி ஒதுக்கீடு

• கிராமங்களை வட்டார தலைமையோடு இணைக்க ரூ.1,230 கோடியில் கண்ணாடி வடவலை அமைப்பு திட்டம்

• சென்னை விரிவாக்க பகுதிகளில் ரூ.614.84 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

• சுற்றுலா துறைக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு

• மீனவர்கள் 60 கடல் மைல் தொலைவு வரை தகவல் தொடர்பு பெறும் வசதி உருவாக்கப்படும்

• ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும்

• குடிநீர் திட்டங்களுக்காக ரூ.1,853 கோடி ஒதுக்கீடு

• 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

• தொழில்நுட்ப துறைக்கு ரூ.158 கோடி ஒதுக்கீடு

• பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது

• எரிசக்தி துறைக்கு ரூ.13,967.08 கோடி ஒதுக்கீடு

• போக்குவரத்து துறைக்கு ரூ.2,717 கோடி ஒதுக்கீடு

• நாகை தரங்கம்பாடி, வெள்ளம்பள்ளத்தில் மீன்பிடி துறைமுகம்.