செய்திகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு நோட்டீஸ்: விளக்கம் கேட்கிறார் சபாநாயகர் தனபால்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக கூறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்கின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்.

இந்நிலையில், அரசு கொறடா பரிந்துரையை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களில் அவர்கள் விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விளக்கம் அளிக்க தவறினாலோ, விளக்கம் திருப்தி இல்லை என்றாலோ அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுக்கலாம்.