செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தி.மு.க. நோட்டீஸ்

சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. #TNAssembly #DMK

மாலை மலர்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.