செய்திகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

மாலை மலர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ஜூலை 16-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதே நாள் மாலையில், சபாநாயகர் மீரா குமார் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க உள்ளது. மேற்கு வங்ளத்தில் சமீபகாலமாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திரிணாமுல் காங்கிரஸ் எடுத்துள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவரான டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார். அதேசமயம், சபாநாயகர் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சி சார்பில் கல்யாண் பானர்ஜி எம்.பி. பங்கேற்பார் என பிரையன் கூறினார்.