செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு - தஞ்சையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரி தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் முன்பு தி.க.வினர் திரண்டனர். அவர்கள் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யகோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான தி.க.வினர் கலந்து கொண்டனர்.

இதேப்போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தி.க. நகர தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் இளையபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

SCROLL FOR NEXT