திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் 4-வது தெருவில் வசித்து வந்தவர் முனுசாமி (வயது 48) மீனவர்.
இன்று காலை அவர் கட்டுமர படகில் திருவொற்றியூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றார். வழக்கத்தை விட கடல் அலை சீற்றமாக காணப்பட்டது.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலை ஒன்று கட்டு மரத்தை புரட்டி போட்டது. இதில் முனுசாமி கடலுக்குள் விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் முனுசாமியின் உடலை மீட்டனர், பின்னர். பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முனுசாமிக்கு சித்ரா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.