செய்திகள்

திருவேற்காடு அருகே 3குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

திருவேற்காடு அருகே மன வருத்தத்தில் இருந்த தாய் 3 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி:

திருவேற்காட்டை அடுத்த மேல்அயனப்பாக்கம் எட்டீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவரது மகள்கள் இந்து (9), ரிங்கலட்சுமி (8), மகன் சந்தோஷ் (6).

சுப்புலட்சுமி கணவரை பிரிந்து தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த சுப்புலட்சுமி கலர் கோலமாவை தண்ணீரில் கரைத்து 3 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்த சுப்புலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

SCROLL FOR NEXT