செய்திகள்

திருவேற்காடு அருகே கள்ளக்காதல் தகராறில் டிரைவர் படுகொலை

திருவேற்காடு அருகே கள்ளக்காதல் தகராறில் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் அன்பு (வயது 35). லாரி டிரைவர். இவர் திருவேற்காடு பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை திருவேற்காடை அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே உள்ள ஓட்டல் முன்பு அன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது தலை, கல்லை போட்டு நசுக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீ சார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அன்புவுக்கும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் தகராறில் அவர் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும் அன்புவுக்கு, வேறு யாருடனும் மோதல் உள்ளதா? அவருடன் நெருங்கி பழகியவர்கள் யார் யார்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாததால் கொலையாளிகளை போலீசாரால் நெருங்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.