செய்திகள்

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் மாணவர்கள் தர்ணா

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, நடப்பாண்டுக்கான கல்வி ஊக்கத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். #Tamilnews