திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லீலாவதி இவர் மணவாள நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்தார்.
திருவள்ளூர் சி.வி. நாயுடு சாலையில் வந்த போது ஆட்டோவில் 3 பெண்கள் ஏறினார்கள். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் இறங்கி சென்று விட்டனர்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்று லீலாவதி பார்த்த போது கழுத்தில் இருந்த 5½ பவுன் செயினை காணவில்லை. ஆட்டோவில் வந்த மர்ம பெண்கள் நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.