கைது 
செய்திகள்

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவர் கைது

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள சாமிரெட்டிகண்டிகை அருகே நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இலங்கை தமிழர் அகதிகள் முகாம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையில் இருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த மாதர்பாக்கம் அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினர்.