செய்திகள்

திருப்பூரில் திடீர் மழையால் மாட்டு தீவன பயிர்கள் சேதம்

திருப்பூரில் திடீர் மழையால் மாட்டு தீவன பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் பருவமழை பெய்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சோள, மக்காச் சோள தட்டைகளை பயிரிட்டு இருந்தனர். தற்போது அறுவடை காலம் என்பதால் 60 சதவீத விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு இருந்த சோள தட்டைகளை அறுவடை செய்து தோட்டங்களில் காய வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் எதிர் பாராத வகையில் திடீரென சாரல் மழை பெய்தது.

இதன் காரணமாக தோட்டத்தில் அறுவடை செய்து காய வைத்து இருந்த அனைத்து சோள தட்டைகளும் மழையில் நனைந்தது. நனைந்த சோள தட்டை களை கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்த முடியாது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

எனவே இன்னும் 6 மாத காலத்திற்கு கால்நடைகளுக்கு உணவு கிடைப்பது கடினம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT