கைது 
செய்திகள்

திருப்பூரில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கைது

திருப்பூரில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று தாராபுரம் ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே 4 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மகராஜா(வயது 25), பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலரசன்(26), குணா(22), ஈஸ்வரன்(24) ஆகியோர் என்பதும், இவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT