செய்திகள்

திருப்பூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தி.மு.க. தொண்டர் கைது

திருப்பூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தி.மு.க. தொண்டர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

திருப்பூர்:

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி கிளையை சேர்ந்த அரசு பஸ் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தது.

இந்த பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் ஆண்டிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார்.

அவர் திடீரென அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது கல் வீசி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இது குறித்து பஸ் டிரைவர் திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல் வீசிய மர்ம நபர் குறித்து விசாரித்து வந்தனர்.

அப்போது அரசு பஸ் மீது கல் வீசியது தி.மு.க.வை சேர்ந்த தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.