திருப்பதி:
திருப்பதியில் வரும் 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதியில் மலர் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, காய் கனிகள் மூலம் அமைக்கப்பட்ட சிலைகள் என பல வகையான கண்காட்சிகள் அமைக்கப்படும்.
இதில் புகைப்பட கண்காட்சியில் வைக்க தேவஸ்தானம் ஏழுமலையான் மற்றும் திருமலையின் மிக அபூர்வமான பழைய புகைப்படங்கள், தேவஸ்தான கோவில்களின் பழமையான புகைப்படங்கள் போன்றவை பக்தர்களிடம் இருந்தால் அவற்றை தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
பழைய புகைப்படங்களை வைத்துள்ள பக்தர்கள் வரும் 16-ந்தேதிக்குள் தங்கள் முகவரியுடன் புகைப்படங்களை மக்கள் தொடர்பு அதிகாரி திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகம், கே.டி.சாலை திருப்பதி-517501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு 0877-2264217 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.