வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

திருப்பதியில் மார்ச் 14-ந்தேதி முதல் நிரந்தரமாக தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடு

திருமலையில் ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்காக நிரந்தரமாக மார்ச் மாதம் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் கார்டு) தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாலை மலர்

திருமலை:

திருமலையில் ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்காக நிரந்தரமாக மார்ச் மாதம் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் கார்டு) தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதையொட்டி திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு இடங்களை தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை மார்ச் மாதம் 14-ந்தேதியில் இருந்து நிரந்தரமாக வழங்கப்பட உள்ளது. திருமலையில் அரசு பஸ் நிலையம், மத்திய வரவேற்பு மையம் பின்புறம் உள்ள கவுஸ்தபம் தங்கும் விடுதி, நந்தகம் தங்கும் விடுதி, வராகசாமி தங்கும் விடுதி, ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை உள்பட பல இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படுகிறது.

அதேபோல் திருப்பதியில் விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதி, கோவிந்தராஜசாமி சத்திரம், அரசு பஸ் நிலையம், சீனிவாசம் தங்கும் விடுதி, அலிபிரி நடைபாதையை ஒட்டி உள்ள பூதேவி அமைனிட்டி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க கவுண்ட்டர்கள் அமைக்கப்படுகிறது. அங்கு, கம்ப்யூட்டர்கள் மற்றும் கைவிரல் ரேகையை பதியும் கருவிகள் பொருத்தப்படும்.

திருமலையில் ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அங்கு, கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். திருமலையில் தினமும் 2 ஆயிரம் ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களை வைத்து, பக்தர்களுக்குச் சேவையாற்ற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். #Tamilnews