பணம் கொள்ளை 
செய்திகள்

திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கொள்ளை

திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே உள்ள கல்லணை புதூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சம்பவத்தன்று தனது நகைகளை அடகு வைக்க திருமங்கலம் வந்தார்.

அங்குள்ள கடையில் அடகு வைத்த பின்னர் ரூ.60 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது பஸ்சில் ஏறுவதற்காக கூட்டம் முண்டியடித்தது. இதில் ராஜேஸ்வரியும் சிக்கிக் கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் ராஜேஸ்வரி கைப்பையில் இருந்த ரூ.60 ஆயிரத்தை நைசாக திருடிக் கொண்டு தப்பினார்.

பஸ் ஏறிய பின் பையில் இருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகின்றனர்.