கைது 
செய்திகள்

திருச்சி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முத்து இருளாண்டி. இவரது மனைவி துர்கா தேவி (வயது 26). இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சீனிவாசன் (26), பிச்சைவேல் (35) ஆகிய இருவரும் முத்து இருளாண்டியுடன் பிரச்சினை செய்துள்ளனர்.

அப்போது சீனிவாசனையும், பிச்சைவேலையும் துர்கா தேவி தட்டிக்கேட்ட போது அவரை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் துர்கா தேவி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சீனிவாசன், பிச்சைவேலை கைது செய்தனர்.