திருச்செந்தூர்:
ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த தேர்வு பற்றிய விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 13-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.
இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் மொத்தம் ரூ.3,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல்நாளான 13-9-2017 அன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் 13-9-2017 அன்று காலை 9 மணிக்கு பயிற்சி கட்டணம் ரூ.3,000-ஐ நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.