திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி. 
செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தயார் கோவில் பிரம்மோற்சவம் தொடங்கியது

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாலை மலர்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு விருட்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் பத்மாவதிதாயார் வாகன வீதிஉலா நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இரவு 8 மணிக்குள் வாகன சேவை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அரை மணிநேரத்துக்கு முன்பாகவே இரவு 7.30 மணிக்கு வாகன சேவை தொடங்கி இரவு 11 மணிவரை நடக்கிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் தரிசன வரிசைகள், அன்னப்பிரசாதம், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரம்மோற்சவ விழாவுக்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக திருப்பதி, திருச்சானூர் வழிநெடுகிலும் தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப் பட்டுள்ளன.

மின்விளக்குகளால் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயாரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.