கைது 
செய்திகள்

திருச்சானூரில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது

திருச்சானூரில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி புறநகர் மாவட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாக போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ரெட்டி உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிகிருஷ்ணா தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சானூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதாகர்ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் சிக்கினர். அவர்கள், வேலூரை சேர்ந்த ராமமூர்த்திசுரேஷ், மஸ்தான், பாக்ராப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டா எனத் தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 22 மோட்டார்சைக்கிள்கள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது திருச்சானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.