டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணியை தேவஸ்தான இணை அதிகாரி கேஎஸ் சீனிவாசராஜு தொடங்கி வைத்தார் 
செய்திகள்

திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிட்ட தரிசன அனுமதி அட்டை விநியோகம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்ய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது.

மாலை மலர்

திருமலை:

திருமலையில் அரசு பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கவுண்ட்டரில் டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு அந்தக் கவுண்ட்டருக்கு நேரில் சென்று ஊழியரிடம் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட, முதல் தரிசன அனுமதி அட்டையை பெற்று, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதி அட்டையை பெற வரும் இலவச தரிசன பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இரு அட்டைகளும் இல்லை என்றால் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுத்து, வழக்கம்போல் இலவச தரிசனத்தில் செல்லலாம்.

அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை பயன்படுத்த கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே ஆதார் சம்பந்தமாக கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை பரிசோதனை அடிப்படையில், பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tirupati