செய்திகள்

ஊழலுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது: சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து

ஊழலுக்கு எதிரான 2-வது சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை:

சுதந்திர போராட்ட வீரர் முனுசாமி தனக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வைத்தியநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

14 வயதில் சுதந்திர போராட்டத்தில் முனுசாமி பங்கேற்கவில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி,  சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை வணங்க வேண்டும் என தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரரான முனுசாமிக்கு மத்திய அரசு 2 மாதத்தில்  ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஊழலுக்கு எதிரான 2வது சுதத்திரப் போராட்டதை தொடங்கும் நேரம் வந்துவிட்டது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

SCROLL FOR NEXT