காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட மின்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-
கஜா புயல் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர், மின்துறை அறிவித்த கடைசி தேதிக்குள் கட்டணத்தை கட்டமுடியாமல் போய் இருக்கலாம். புதுவை அரசின் உத்தரவிற்கு இணங்க, வருகிற 30-ந் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணத்தை கட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaCyclone