இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து அணியான செல்சியா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. இதுகுறித்து மொனாகோ அணியிடம் பேசியது. அப்போது மொனாகோ அணியும் தியேமௌ பகாயோகோவை கொடுக்க சம்மதித்தது.
இதனால் இரு கிளப்புகளுக்கும் இடையில் தியேமௌ பகாயோகோ டிரான்ஸ்பர் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2017-18 சீசனில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தியேமௌ பகாயோகோ செல்சியா அணிக்காக விளையாடுவார்.
தியேமௌ பகாயோகோவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 337 கோடி ரூபாய் செல்சியாக அணி மொனாகோவிற்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.