மணப்பாறை:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டி ஊராட்சி செயலர், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீரென மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.