செய்திகள்

துவாக்குடியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ள நிலையில் திருவெறும்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். எலக்ட்ரீசியன். இவரது மகன் சஞ்சய் (வயது 8). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7-ந்தேதி சஞ்சய்க்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் குணமாகவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.