திருச்சி:
திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (20-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறப்படும் பகுதியானபெல் டவுன் ஷிப்பில் சி-செக்டாரில் ஒரு பகுதி மற்றும் ஏ, டி, இ, ஆர்,
பிஎச் செக்டர், ஏ.ஓ.எல், நேருநகர், அண்ணா வளைவு, அக்பர்சாலை, எம்.டி.சாலை, அரசு பாலிடெக்னிக், வ.உ.சி.நகர், எழில்நகர், சொக்கலிங்கபுரம், தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.), ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், துவாக்குடி, மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேவராயநேரி, தேனீர்ப்பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (சனிக் கிழமை) காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.