கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் புத்தன்சிரை பகுதியை சேர்ந்தவர் சையன்(வயது 54). இவரது மனைவி பிந்து(45).
சையன் நேற்று மாலை தனது மனைவியுடன் சாலக்குடியில் இருந்து திருச்சூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சூரில் உள்ள கேரள அரசு பஸ் டெப்போ அருகே சென்றபோது சாலையில் கிடந்த பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக சையின் பிரேக் போட்டார்.
அப்போது அவரின் பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சையனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.