கோப்புபடம் 
செய்திகள்

மும்முனை மின்சாரம்-உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர் ஏற்றுமதி சார்ந்த நகரம். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் இடையூரின்றி மின் வினியோகம் தேவை.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தின் பொருளாதாரம் நிமிர்வதற்கு, வேளாண்மை மற்றும் தொழில்துறை இரு கண்கள் போன்றவை. இதற்கு மின்சாரம் அத்தியாவசியத்தேவை. மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் வேளாண்மை மற்றும் தொழில்துறை முடங்கிவிடும். பாதிப்புகள் ஏற்படும். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மாவட்டம் முழுக்க மின் பராமரிப்புப்பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.

திருப்பூர் ஏற்றுமதி சார்ந்த நகரம். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் இடையூரின்றி மின் வினியோகம் தேவை. இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக  கோடை காலத்தில்  ஊரடங்கு அமலானதால் தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்படவில்லை. இதனால்  மின் வினியோகம் மற்றும் மின்தடை பிரச்சினைகள் பெரிதாக எழவில்லை.

தற்போது தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் இயங்க தொடங்கியுள்ளன. ஆடிப்பட்டம் தொடங்கியுள்ளதால் வேளாண் பணிகளும் மும்முரமாகியுள்ளன. சமீபத்தில் விசைத்தறியாளர்கள்  மும்முனை மின்சாரம் கிடைப்பதில் குளறுபடி நிலவுவதை சுட்டிக்காட்டினர்.கிராமப்புறங்களில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் என்பது  கனவாகத்தான் இன்னும் இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கிராமங்களில் வேளாண்மை மட்டுமல்லாது தொழில் நிறுவனங்களும் அமையப்பெற்றிருக்கின்றன. மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைத்தால்தான் உற்பத்தி தடையின்றி நடைபெறும். எனவே அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.