கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காயத்ரி, விஜயசங்கர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொசமேடு, பாலக்கோடு சாலையில் சென்ற போது தடை செய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்த காவேரிபட்டணத்தை அடுத்த ராம்சங்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (வயது55), தொட்டிபாலம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (28), அரசமரத்தெருவை சேர்ந்த முருகன் (49) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 14 பாக்கெட் பான்மசாலாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.