செய்திகள்

காஷ்மீரில் 3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்களில் இருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, தேடுதல் பணியின் போது மேலும் 6 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பித்து சென்று இருக்கலாம என்று கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெயர்கள் மஜித் மிர், ஷரிக் அஹ்மது மற்றும் ஐர்ஷத் அகமது என்பது அடையாளம் காணப்பட்டது.

முன்னதாக சோப்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.