செய்திகள்

கர்நாடகா: டெம்போ மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

கர்நாடக மாநிலம் மைசூர்-பெங்களூரு சாலையில், மினி டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது. 

மோதிய வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி டெம்போ மற்றும் மற்றொரு கார் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற இருவர் மற்றும் டெம்போ ஓட்டுநர் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மாண்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக மாதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த காரில் பயணம் செய்த இரு நபர்கள் அகமது மற்றும் பரூக் என்பதும் மினி டெம்போ டிரைவர் சாகர் என்பதும் விசாரணையில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.